UPDATED : செப் 28, 2024 12:00 AM
ADDED : செப் 28, 2024 11:36 AM

கோவை:
புரூக்பீல்ட்ஸ் சார்பில் மூன்று நாட்கள் கல்வி கண்காட்சி நடக்கிறது. கண்காட்சியை, மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், நேற்று துவக்கி வைத்தார்.
புரூக்பீல்ட்ஸ் மால் சார்பில், வித்யா உட்சவ் என்ற பெயரில், மூன்று நாட்கள் கல்வி கண்காட்சி, புரூக்பீல்ட்ஸ் மாலில் நேற்று துவங்கி நாளை வரை நடக்கிறது.
இதில், 12 நிறுவனங்கள் ஸ்டால்கள் அமைத்துள்ளன. எட்டு கல்வி நிறுவனங்கள் மற்றும் புத்தகம், ஆடை, ஸ்டேஷனரி, சிறுவர்கள் ஜிம் உள்ளிட்ட நான்கு ஸ்டால்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து, புரூக்பீல்ட்ஸ் முதன்மை செயல் அலுவலர் பாலசுப்ரமணியம் கூறுகையில், இந்த கல்வி கண்காட்சியின் மூலம் பெற்றோர், கல்வியில் தற்போது உள்ள புதுமைகள், தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்ள முடியும். குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையாக புது புது நுட்பங்கள், உபகரணங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படும், என்றார்.