பாரதியார் பல்கலைக்கூட மாணவர்கள் இரண்டாவது நாளாக போராட்டம்
பாரதியார் பல்கலைக்கூட மாணவர்கள் இரண்டாவது நாளாக போராட்டம்
UPDATED : செப் 28, 2024 12:00 AM
ADDED : செப் 28, 2024 11:26 AM
அரியாங்குப்பம்:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதியார் பல்கலைக்கூட மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து இரண்டாவது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக்கூட இளங்கலை மற்றும் முதுகலை பயிலும் நுண்கலைத்துறை மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து நேற்று இரண்டாவது நாளாக போராட்டத்தை தொடர்ந்தனர்.
போராட்டத்தில், கல்லுாரி நிர்வாகம் நுண்கலைத்துறையின் தனித்தன்மையை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதை கைவிட வேண்டும். தொழில் நுட்ப கல்வியான நுண்கலைத்துறை படிப்பை, கலை மற்றும் அறிவியல் படிப்புடன் சேர்க்க கூடாது.
தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நுண்கலைத் துறையை இணைக்க வேண்டும். நுண்கலைத்துறைக்கு தனியாக முதல்வர் நியமிக்க வேண்டும் உள்ளிட்டவை குறித்து போராட்டத்தில், வலியுறுத்தப்பட்டது.