தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சமூக ஊடகங்கள் பயன்படுத்த எகிப்து சிறுவர்களுக்கு கட்டுப்பாடு

சமூக ஊடகங்கள் பயன்படுத்த எகிப்து சிறுவர்களுக்கு கட்டுப்பாடு

சமூக ஊடகங்கள் பயன்படுத்த எகிப்து சிறுவர்களுக்கு கட்டுப்பாடு


UPDATED : ஜன 27, 2026 10:12 AM

ADDED : ஜன 27, 2026 10:14 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 27, 2026 10:12 AM ADDED : ஜன 27, 2026 10:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கெய்ரோ:
டிஜிட்டல் ஊடகங்களிடம் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் விதமாக, சமூக ஊடகங்களை குழந்தைகள் பயன்படுத்துவதை முறைப்படுத்த புதிய சட்டத்தை கொண்டுவர எகிப்து முடிவு செய்துள்ளது.

மேற்காசிய நாடான எகிப்தில், கடந்த 2024ம் ஆண்டு அறிக்கையின்படி, அந்நாட்டில் உள்ள 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 50 சதவீதம் பேர் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதும், மேலும், அவர்கள் எளிதில் ஆன்லைன் ஆபத்தில் சிக்குவதும் தரவுகளில் தெரிய வந்தது.

இதையடுத்து, எகிப்து அதிபர் அப்தெல் பத்தாஹ் அல் சிசி, குழந்தைகள் சரியான முதிர்ச்சியை அடையும் வரை, அவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் சட்டங்கள் குறித்து ஆராயுமாறு எகிப்து அரசுக்கு சமீபத்தில் உத்தரவிட்டார்.

இதையடுத்து, எகிப்திய அரசு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம், அந்நாட்டு பார்லிமென்ட், குழந்தைகள் நல அமைப்புடன் இணைந்து இது குறித்து ஆய்வு மேற்கொண்டு விரைவில் சட்டம் இயற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஏற்கனவே, உலகளவில் ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்டோருக்கும், பிரிட்டனில் 15 வயதுக்கு உட்பட்டோருக்கும் சமூக வலைதளங்களை பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதை முன்மாதியாக கொண்டு எகிப்திலும் இச்சட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us