தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இந்தியாவுடனான வர்த்தகத்தை அமெரிக்க அதிபர் தடுத்தார்: ஆடியோவில் எம்.பி., தகவல்

இந்தியாவுடனான வர்த்தகத்தை அமெரிக்க அதிபர் தடுத்தார்: ஆடியோவில் எம்.பி., தகவல்

இந்தியாவுடனான வர்த்தகத்தை அமெரிக்க அதிபர் தடுத்தார்: ஆடியோவில் எம்.பி., தகவல்


UPDATED : ஜன 27, 2026 10:11 AM

ADDED : ஜன 27, 2026 10:12 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 27, 2026 10:11 AM ADDED : ஜன 27, 2026 10:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நியூயார்க்:
இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதை, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தடுத்துள்ளதாக அவருடைய கட்சி எம்.பி., குற்றஞ்சாட்டியுள்ள, 'ஆடியோ' வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த, டெக்சாஸ் மாகாண எம்.பி.,யான டெட் குரூஸ் பேசியதாகக் கூறப்படும், 10 நிமிட ஆடியோ வெளியாகியுள்ளது. இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தங்கள் செய்வது தொடர்பாக கடந்தாண்டு பேசப்பட்டது. அந்த காலகட்டத்தில், கட்சியின் தனியார் நன்கொடையாளர்களுடன் டெட் குரூஸ் பேசியுள்ளார்.

இவ்வாறு, கடந்தாண்டு துவக்கம் மற்றும் நடுப்பகுதியில், நன்கொடையாளர்களுடன் அவர் பேசிய 10 நிமிட ஆடியோ தற்போது வெளியாகி உள்ளது. அதில், துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், வெள்ளை மாளிகை ஆலோசகர் பீட்டர் நவரோ ஆகியோரும், சில சமயங்களில் அதிபர் டிரம்பும் சேர்ந்து இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தைத் தடுத்துவிட்டதாக, டெட் குரூஸ் கூறியுள்ளார்.

இந்த ஒப்பந்தம் நடந்திருந்தால் இரு நாடுகளுக்கும் பெரிய பலன் கிடைத்திருக்கும் எனவும், ஆனால், வான்ஸ், நவரோ போன்றவர்களின் எதிர்ப்பால் தடைபட்டுவிட்டதாகவும் அதில் அவர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us