UPDATED : ஜூன் 20, 2025 12:00 AM
ADDED : ஜூன் 20, 2025 10:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: 
அரசு பள்ளிகளில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு, தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, பள்ளி மேலாண்மைக் குழுவுக்கு, பள்ளிக் கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள் என, 13,000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படும் வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறை செயலர் சந்திரமோகன் பிறப்பித்துள்ள உத்தரவில், தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம் என கூறப்பட்டுள்ளது.

