sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அரபி கல்லுாரிகளில் ஐ.எஸ்., பயங்கரவாத பயிற்சி

/

அரபி கல்லுாரிகளில் ஐ.எஸ்., பயங்கரவாத பயிற்சி

அரபி கல்லுாரிகளில் ஐ.எஸ்., பயங்கரவாத பயிற்சி

அரபி கல்லுாரிகளில் ஐ.எஸ்., பயங்கரவாத பயிற்சி


UPDATED : ஜூன் 20, 2025 12:00 AM

ADDED : ஜூன் 20, 2025 10:26 AM

Google News

UPDATED : ஜூன் 20, 2025 12:00 AM ADDED : ஜூன் 20, 2025 10:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
கோவை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில், அரபி கல்லுாரி மற்றும் கிளைகள் நடத்தி, அங்கு ஐ.எஸ்., அமைப்புக்கு ஆட்களை சேர்த்து, பயங்கரவாத பயிற்சி அளித்த தகவல், தேசிய புலனாய்வு அமைப்பான, என்.ஐ.ஏ., விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோவை அரபி கல்லுாரி உள்ளிட்ட இடங்களில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். அவற்றை ஆய்வு செய்து, கோவை அரபி கல்லுாரியின் நிறுவனர் ஜமீல் பாஷாவை, 49, கைது செய்தனர்.

தன்னை பேராசிரியர் என அறிமுகம் செய்த அவர், அரபி கல்லுாரிக்கு ஆள் பிடித்து, அவர்களை ஐ.எஸ்., அமைப்பில் சேர்த்து, பயங்கரவாத பயிற்சி அளித்துள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் ஆயுத பயிற்சியும் தந்துள்ளார்.

தன்னால் மூளைச்சலவை செய்யப்பட்ட கோவை போத்தனுார் பகுதியை சேர்ந்த அகமது அலியை, 48, தன் கல்லுாரியின் முதல்வராக நியமித்தார்.

மூளைச்சலவை

கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த ஜவஹர் சாதிக்கை, 48, முஸ்லிம் இளைஞர்களை மூளைச்சலவை செய்யும் ஊழியராக பணியமர்த்தினார். சென்னை பாலவாக்கத்தை சேர்ந்த ேஷக் தாவூத்திற்கு, 47, பயங்கரவாத பயிற்சி அளித்து, திருச்சியில் அரபி கல்லுாரி கிளையை துவங்கி, அதன் ஒருங்கிணைப்பாளராக நியமித்து உள்ளார்.

திண்டுக்கல் அரபி கல்லுாரி கிளைக்கு, திண்டுக்கல் மாவட்டம் பெரியகலையம்புத்துாரைச் சேர்ந்த ராஜா அப்துல்லாவை, 38, நியமித்துள்ளார். இவர்கள் நால்வரையும், என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று முன்தினம் கைது செய்தனர். சென்னைக்கு அழைத்து வந்து, என்.ஐ.ஏ., அலுவலகத்தில் விசாரித்தனர்.

கைதான ஷேக் தாவூத் அளித்துள்ள வாக்குமூலம்:

குறைந்த கட்டணத்திலும், இலவசமாகவும் அரபி கற்றுத் தரப்படும் என, சமூக வலைதளம் வாயிலாகவும், பேனர் வைத்தும் விளம்பரம் செய்வோம். முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் மற்றும் அவர்கள் நடத்தும் கல்லுாரிகள், விடுதிகளுக்கு சென்றும், அரபு மொழி சிறப்பு வகுப்புகள் குறித்து எடுத்துரைப்போம்.

பெற்றோர் அரவணைப்பு இன்றி இருக்கும் இளைஞர்களை மூளைச்சலவை செய்து, கல்லுாரி கட்டணத்தை ஏற்பதாக கூறுவோம்.

அவர்களை மூளைச்சலவை செய்து, ஐ.எஸ்., அமைப்பில் சேர்ப்போம். அரபி மொழி வகுப்பு போல பயங்கரவாத செயலுக்கான பயிற்சி அளிப்போம். தாய், தந்தையை இழந்த இளைஞர்களுக்கு தான் முதலில் குறிவைப்போம். எங்கள் மதத்தைச் சேர்ந்த தொழில் அதிபர்கள் நிதியுதவி அளிப்பர்.

இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படுவதே எங்கள் நோக்கம். இந்தியாவில், கிலாபத் எனப்படும் முஸ்லிம்கள் ஆட்சியை நிறுவ வேண்டும். அதற்கு, அரசு அலுவலகங்கள், கோவில்கள், நீதித்துறை அலுவலகங்களை தகர்க்க வேண்டும்.

இதற்காக, அரபி கல்லுாரிகள் நடத்துவது போல, பயங்கரவாத பயிற்சி அளித்து, தற்கொலை படைகளை உருவாக்கி வந்தோம். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us