UPDATED : மார் 05, 2025 12:00 AM
ADDED : மார் 05, 2025 10:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:
தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், கோவை அரசு கலை கல்லுாரியில் வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடந்தது. முதல்வர் எழிலி முகாமை துவக்கிவைத்தார்.
கோவையை சேர்ந்த 43 பல்வேறு பிரிவுகளை சேர்ந்த நிறுவனங்கள் வேலைவாய்ப்பு நிகழ்வில் பங்கேற்றனர். இதில் 4, 250 பேர் பங்கேற்க பதிவு செய்ததில், 2291 பேர் பங்கேற்றனர்.
எழுத்து தேர்வு, குழு விவாதம், நேர்காணல் ஆகிய பிரிவுகளின் கீழ், தேர்வு முறைகள் நடத்தப்பட்டன. தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இம்முகாம் வாயிலாக, தேர்வு பெற்ற மாணவர்களுக்கு 12 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை நிறுவனங்கள் மாத ஊதிய அடிப்படையில் வழங்க, நிர்ணயம் செய்துள்ளதாக, கல்லுாரி முதல்வர் எழிலி தெரிவித்தார்.