sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அண்ணா பல்கலையில் அட்மிஷன்

/

அண்ணா பல்கலையில் அட்மிஷன்

அண்ணா பல்கலையில் அட்மிஷன்

அண்ணா பல்கலையில் அட்மிஷன்


UPDATED : மார் 04, 2025 12:00 AM

ADDED : மார் 04, 2025 07:52 PM

Google News

UPDATED : மார் 04, 2025 12:00 AM ADDED : மார் 04, 2025 07:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைநிலை மற்றும் ஆன்லைன் கல்வி மையம், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.எஸ்சி.,-சி.எஸ்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

படிப்பு:
எம்.பி.ஏ.,
பிரிவுகள்: ஜெனரல், டெக்னாலஜி, மார்க்கெட்டிங், ஹுமன் ரிசோர்ஸ், பினான்சியல் சர்வீசஸ், ஹெல்த் சர்வீஸ், ஆப்ரேஷன்ஸ்

தகுதிகள்:


எம்.பி.ஏ..:
ஏதேனும் ஒரு துறையில் இளநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். டி.இ.இ.டி., எனும் தொலைநிலை கல்வி நுழைவுத்தேர்வு அல்லது டான்செட் 2024 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

எம்.சி.ஏ.,:

பி.சி.ஏ., அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங் பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மேலும், டி.இ.இ.டி., அல்லது டான்செட் 2024 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது.

எம்.எஸ்சி.,-சி.எஸ்.,:

கணிதம் அல்லது புள்ளியியல் துறையில் 3 ஆண்டுகால இளநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். இப்படிப்பில் சேர எந்தவித நுழைவுத்தேர்வும் எழுத வேண்டிய அவசியம் இல்லை.

விபரங்களுக்கு:

https://cde.annauniv.edu/

அதேபோல், ஆன்லைன் வாயிலான எம்.பி.ஏ., படிப்பிற்கான மாணவர் சேர்க்கையும் பிரத்யேகமாக நடைபெறுகிறது.

பிரிவுகள்:


* பிசினஸ் அனலெடிக்ஸ்
* ஜெனரல் மேனேஜ்மெண்ட்

படிப்பு காலம்:

2 ஆண்டுகள்

தகுதிகள்:

ஏதேனும் ஒரு துறையில் இளநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். ஒ.இ.இ.டி., எனும் ஆன்லைன் கல்வி நுழைவுத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

மார்ச் 22

நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள்:

மார்ச் 29

விபரங்களுக்கு:

https://onlinecde.annauniv.edu/






      Dinamalar
      Follow us