UPDATED : மார் 04, 2025 12:00 AM
ADDED : மார் 04, 2025 07:44 PM

அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் சிறந்து விளங்கும் இந்திய மாணவ, மாணவிகள் சியோ டெக் ஸ்காலர்ஷிப் 2025 திட்டத்தின் கீழ் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
கொரியா குடியரசின் சியோல் மெட்ரோபாலிட்டன் அரசு இந்த உதவித்தொகை திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவிகள் சியோலில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் செப்டம்பர் 2025-ல் துவங்கும் முதுநிலைப் பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெறலாம்.
உதவித்தொகை விபரம்:
* முழு கல்வி கட்டணம்
* உணவு மற்றும் இருப்பிட செலவுகளுக்காக மாதம் சுமார் 60 ஆயிரம் ரூபாய்
* கொரியாவிற்கு ஒரு முறை சென்று திரும்புவதற்கான விமான கட்டணம்
* சுகாதார காப்பீடு
ஆகியவை இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது.
தகுதிகள்:
* இந்திய குடிமகனாக இருத்தல் அவசியம்
* 1985ம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவராக இருத்தல் வேண்டும்
* என்.ஐ.ஆர்.எப்., தரவரிசையின் கீழ், சிறந்த 100 இந்தியப் பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் அறிவியல் அல்லது பொறியியல் துறையில் குறைந்தது 80 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
* உரிய ஆங்கில மொழிப்புலமை
பங்கேற்கும் பல்கலைக்கழகங்கள்:
1. கியுங் ஹீ பல்கலைக்கழகம்,
2. கொரியா பல்கலைக்கழகம்,
3. குவாங்வூன் பல்கலைக்கழகம்,
4. சியோகியோங் பல்கலைக்கழகம்,
5. சியோல் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்,
6. சியோல் பல்கலைக்கழகம்,
7. சுங்க்யுங்வான் பல்கலைக்கழகம்,
8. சூக்மியுங் மகளிர் பல்கலைக்கழகம் (பெண்கள் மட்டுமே),
9. சூங்சில் பல்கலைக்கழகம்
விண்ணப்பிக்க கடைசி நாள்:
மார் 14
விபரங்களுக்கு:
www.education.gov.in