UPDATED : ஜன 23, 2026 01:28 PM
ADDED : ஜன 23, 2026 01:30 PM
தேனி: வீரபாண்டி அரசு கலை, அறிவியல் கல்லுாரியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (ஜன., 23) நடைபெறுகிறது.
தேனி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு , தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வீரபாண்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் காலை 9:00 மணி முதல் மதியம் 03:00 மணி வரை நடைபெற உள்ளது.
இம்முகாமில் 75 க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்று வேலைநாடுநர்களை தேர்வு செய்யவுள்ளனர். மேலும், பல திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு திறன் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்புக்கு தேர்வு செய்யவுள்ளனர்.
8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை மற்றும் பி.இ., டிப்ளமோ, ஐ.டி.ஐ., உள்ளிட்ட இதர கல்வித் தகுதிகளுடைய அனைவரும் கல்விச் சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயனடையலாம். எவ்வித கட்டணமும் இல்லை. https://www.tnprivatejobs.tn.gov.in, பதிவேற்றம் செய்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.

