தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டி.என்.பி.எஸ்.சி., இலவச மாதிரித் தேர்வுக்கு அழைப்பு

டி.என்.பி.எஸ்.சி., இலவச மாதிரித் தேர்வுக்கு அழைப்பு

டி.என்.பி.எஸ்.சி., இலவச மாதிரித் தேர்வுக்கு அழைப்பு


UPDATED : ஜன 23, 2026 01:30 PM

ADDED : ஜன 23, 2026 01:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 23, 2026 01:30 PM ADDED : ஜன 23, 2026 01:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்விற்கு இலவச முழு மாதிரித் தேர்வுகள் நடத்தப்படுவதை தேர்வர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கலெக்டர் ரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியுள்ளதாவது: அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டு குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு கடந்தாண்டு செப்., 28ல் நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் பிப். 8ல் முதன்மைத் தேர்வு நடைபெற உள்ளது.

இத்தேர்விற்கு சிறந்த வல்லுநர்கள் மூலம் வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு மாநில அளவிலான இலவச முழுமாதிரி தேர்வுகள் நாளை (ஜன., 24) மற்றும் ஜன., 31ல் காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நடைபெறவுள்ளது.

தேர்வெழுத வருபவர்கள் விண்ணப்ப நகல், பாஸ்போர்ட் போட்டோ சமர்பிக்க வேண்டும். இம்முழு மாதிரித்தேர்வில் பங்கு பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களின் பெயரை 63792 68661 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us