ஆளுமை திறன்களை வளர்த்து கொள்ள மாணவர்களுக்கு அறிவுரை
ஆளுமை திறன்களை வளர்த்து கொள்ள மாணவர்களுக்கு அறிவுரை
UPDATED : ஜன 23, 2026 01:31 PM
ADDED : ஜன 23, 2026 01:33 PM
குன்னுார்: “ஆளுமை பயிற்சிகளால் நமது ஆளுமை திறன்களை வளர்த்து கொண்டு நல்ல எண்ணங்களுடன் வாழ மாணவர்கள் முன் வரவேண்டும்,” என, விழாவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
குன்னுார் அரசு கலை கல்லுாரியில் தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கல்லுாரி முதல்வர் முனைவர் சனில் தலைமை வகித்தார்.
ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் மனோகரன் பேசுகையில், “39 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து, மூன்றாயிரம் ஆண்டுகளுக்கான போதனைகளை தந்த சுவாமி விவேகானந்தரின், போதனைகளின் படி, இளைய சமுதாயம்உணர்ந்து செயல்பட்டால், தம்மை மேம்படுத்துவதுடன் நாட்டையும் மேம்படுத்தலாம்,” என்றார்.
அமிர்தராஜ் பவுண்டேஷன் நிறுவனர் அமிர்தராஜ் பேசுகையில், “ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு நோக்கத்துடன் தான் படைக்கப்பட்டிருக்கிறான்.
ஆளுமை பயிற்சிகளால், நமது ஆளுமை திறன்களை வளர்த்து கொண்டு நல்ல எண்ணங்களுடன் வாழ மாணவர்கள் முன் வரவேண்டும்,” என்றார். சாய் நிவாஸ் சமூக செயல்பாட்டாளர் உடல்நலம் மற்றும் ஆன்ம பலம் பெறுவதற்கான பங்கு, ஒழுக்கம், கல்வி, மனித மாண்பு குறித்து பேசினார்.
மாணவ, மாணவியருக்கு காந்தியின் சுய சரிதையான சத்திய சோதனை புத்தகம் வழங்கப்பட்டு, நாள்தோறும் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வலியுறுத்தப்பட்டது.
உபதலை சாய் நிவாஸ் சார்பில், சத்துமாவு, நியூட்ரி மில்க், வழங்கப்பட்டது. ஊட்டச்சத்து பானம் தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்க பட்டது. பேராசிரியர் முருகானந்தம் நன்றி கூறினார்.

