UPDATED : அக் 19, 2024 12:00 AM
ADDED : அக் 19, 2024 08:49 AM
மதுரை:
மதுரையில் மாவட்ட நிர்வாகம், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் அக். 9ல் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
இதில் பங்கேற்றவர்களில் 179 பேருக்கு பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைத்தது. 80 பேர் பல்வேறு நிறுவனங்களில் தொழிற் பயிற்சியில் சேர தேர்வு செய்யப்பட்டனர்.
தவிர பல தனியார் நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகள் பலர் குறித்த தரவுகளை சேகரித்துள்ளனர். தேவைப்படும்போது அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க உத்தரவாதமளித்துள்ளன.
தேர்வானவர்களுக்கு அரசு செயலர் சிஜிதாமஸ், கலெக்டர் சங்கீதா நியமன ஆணை வழங்கினர். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை துணை இயக்குனர் ரவீந்திரநாத்சிங், உதவி இயக்குனர் ஜெகதீசன், மாவட்ட அலுவலர் சுவாமிநாதன், தொழில், வழிகாட்டி அலுவலர் வெங்கடசுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.