UPDATED : அக் 19, 2024 12:00 AM
ADDED : அக் 19, 2024 08:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:
சேலம், அய்யந்திருமாளிகையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ரூ.2.50 கோடியில் அறிவுசார் மையம் போட்டி தேர்வாளர்களுக்காகவே அமைக்கப்பட்டு உள்ளது.
இங்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சமயமூர்த்தி நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், இந்த மையம் பிற மாவட்டங்களுக்கு முன்னுதாரணமாக திகழும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மையத்தில் முன்பகுதியில் நிழல் தரும் மரங்களையும், பூச்செடிகளையும் வளர்த்தால் போட்டி தேர்வர்கள் பசுமையான சூழலில் படிப்பதற்கு வசதியாக இருக்கும். அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் தெரிவித்தார்.கலெக்டர் பிருந்தாதேவி, கமிஷனர் ரஞ்ஜீத் சிங்க, கூடுதல் கலெக்டர் லலித் ஆதித்ய நீலம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.