UPDATED : அக் 19, 2024 12:00 AM
ADDED : அக் 19, 2024 08:52 AM
சேலம்:
சேலம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், நுண்ணுயிரியல் துறை சார்பில், ஆய்வுக்கூட தர மேலாண்மை குறித்த நான்கு நாள் பயிற்சி முகாம், நேற்று தொடங்கியது.நோய் இயல் துறை தலைவர் சுஜாதா வரவேற்றார். மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜ்குமார், கல்லுாரி துணை முதல்வர் செந்தில்குமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
டீன் தேவி மீனாள் முகாமை தொடங்கி வைத்தார். முதன்மை பயிற்சியாளர்கள் ஜோஷ், ஸ்வேதா, நீரஜ்ஜான் ஆகியோர் நுண்ணுயிரியல் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், ஆய்வக தொழில் நுட்ப வசதிகள், ஆராய்ச்சி முடிவுகள் குறித்து எடுத்துரைத்தனர்.
பேராசிரியர்கள் பேசுகையில், ஆய்வக தர மேலாண்மை பயிற்சியை, தேசிய மருத்துவ ஆணையம் கட்டாயமாக்கி உள்ளது. இதற்கு முன், தனியார் நிறுவனங்களில் மட்டும் பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது, சேலம் உள்பட அனைத்து அரசு மருத்துவக்கல்லுாரிகளில், ஆய்வக தர மேலாண்மை பயிற்சி அளிக்கப்படுகிறது' என்றனர். தர்மபுரி, ஈரோடு, கரூர், நாமக்கல் உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லுாரிகளை சேர்ந்த உதவி பேராசிரியர்கள், முதுகலை மாணவர்கள், மருத்துவமனை தரக்கட்டுப்பாடு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை நுண்ணுயிரியல் துறை தலைவர் பேராசிரியர் ராஜேஷ் செங்கோடன் செய்திருந்தார்.