UPDATED : செப் 05, 2025 12:00 AM
ADDED : செப் 05, 2025 10:31 AM
வால்பாறை:
வேலை வாய்ப்பு குறித்து கல்லுாரி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் படிக்கும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு, வேலை வாய்ப்பு குறித்த சிறப்பு பயிற்சி முகாம், முதல்வர் ஜோதிமணி தலைமையில் நடந்தது.
முகாமில், கோவை தனியார் நிறுவனத்தின் துணைத்தலைவர் நரேந்திரன் கலந்து கொண்டு பேசும் போது, 'மாணவர்கள் படித்து முடிந்த பின், தகுதிக்கு ஏற்றவாறு வேலைவாய்ப்புகள் உள்ளன. காலத்துக்கு ஏற்ப ஏற்படும் மாற்றங்களை அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.
பேச்சு, குழு விவாதம் போன்ற திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். திட்டமிடல், நேர மேலாண்மையை கடைபிடிக்க வேண்டும்.
வேலை வாய்ப்புக்கான நேர்முகத்தேவில் பங்கேற்கும் மாணவர்கள், எந்த வித பதட்டமும் இல்லாமல் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். தன்னம்பிக்கையுடன் படித்தால், தகுதியான வேலை வாய்ப்பு நிச்சயம் அமையும்,' என்றார்.
முகாமில், 192 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு துறை பேராசிரியர்கள் உமாமகேஸ்வரி, பிரியதர்ஷினி, மகேஸ்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.