தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தாட்கோ மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சிகள்

தாட்கோ மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சிகள்

தாட்கோ மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சிகள்


UPDATED : பிப் 13, 2026 12:46 PM

ADDED : பிப் 13, 2026 12:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 13, 2026 12:46 PM ADDED : பிப் 13, 2026 12:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தாட்கோ மூலம் வேலை வாய்ப்பு பயிற்சி வழங்கப்படுகிறது.

கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:


தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

தற்போது, தாட்கோ சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, உலக தர உணவு சேவை மற்றும் சூழலியல் சுற்றுலா திறன்பயிற்சி. உயர் தொழில்நுட்ப 'ஏ.ஐ.,' பயிற்சி, ஆடை வடிவமைப்பு, மேலாண்மை திறன் பயிற்சி மற்றும் அழகுக்கலை மற்றும் சிகை அலங்கார மேலாண்மை திறன் ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். பயிற்சி முடிக்கும் இளைஞர்களுக்கு சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பிற்கு வழி வகை செய்யப்படும். குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சியினை பெற தாட்கோ இணையதளம் www.tahdco.com முகவரியில் விண்ணப்பிக்கலாம். கால அளவு மூன்று மாதங்கள் ஆகும்.

மேலும், விபரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, கலெக்டர் அலுவலகம், கள்ளக்குறிச்சி முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us