sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

உயர்கல்வியுடன் கூடிய வேலைவாய்ப்பு; தேர்வு எழுத தயாராகுங்க மாணவர்களே!

/

உயர்கல்வியுடன் கூடிய வேலைவாய்ப்பு; தேர்வு எழுத தயாராகுங்க மாணவர்களே!

உயர்கல்வியுடன் கூடிய வேலைவாய்ப்பு; தேர்வு எழுத தயாராகுங்க மாணவர்களே!

உயர்கல்வியுடன் கூடிய வேலைவாய்ப்பு; தேர்வு எழுத தயாராகுங்க மாணவர்களே!


UPDATED : ஜூலை 25, 2024 12:00 AM

ADDED : ஜூலை 25, 2024 09:54 AM

Google News

UPDATED : ஜூலை 25, 2024 12:00 AM ADDED : ஜூலை 25, 2024 09:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:
தமிழக திறன் மேம்பாட்டு கழகம், நான் முதல்வன் திட்டத்தில், எச்.சி.எல்., நிறுவனம் வாயிலாக, உயர் கல்வி மற்றும் எச்.சி.எல்., பயிற்சியுடன் வேலைவாய்ப்பு அளிக்கிறது.

அரசு, அரசு உதவி பெறும், மெட்ரிக் பள்ளி, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 2023 மற்றும் 2024 ம் ஆண்டுகளில், பிளஸ்2 கலை பாடப்பிரிவில், 75 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு, தாராபுரம் என்.சி.பி., ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வரும் 27 ம் தேதியும்; காங்கயம் நத்தக்காடையூர் பில்டர்ஸ் பொறியியல் கல்லுாரியில் 28 ம் தேதி; திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 29ம் தேதிகளில் நடைபெறுகிறது.

தேர்வு எழுதவிரும்பும் மாணவர்கள், https://registrations.hcltechbee.com என்கிற லிங்க் ல் விவரங்களை அளித்து, பதிவு செய்வது கட்டாயம். மாணவர்கள் தங்கள் அருகாமையில் உள்ள மையத்தில், தேர்வு எழுதலாம். தேர்வுக்கு வரும்போது, கல்விச் சான்று, ஆதார் அட்டை நகல், மொபைல் போன் கொண்டுவரவேண்டும்.

தேர்வாகும் மாணவர்களுக்கு, எச்.சி.எல்., சார்பில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புடன் கூடிய உயர்கல்வி அளிக்கிறது. பயிற்சி காலத்தில் மாதம் 10 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, பணியில் சேர்ந்த உடன் துவக்க நிலை சம்பளமாக ஆண்டுக்கு, 1.70 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும்.

எச்.சி.எல்., டெக்னாலஜிஸ்-ல் பணிபுரிந்துகொண்டே, சாஸ்த்ரா, கே.எல்., அமிட்டி உள்ளிட்ட பல்கலை கழகங்களில் உயர்கல்வி கற்பதற்கான வாய்ப்பும் பெற்றுத்தரப்படுகிறது; உயர்கல்விக்கான கட்டணத்தில் ஒருபகுதியை எச்.சி.எல்., நிறுவனமே வழங்கி விடுகிறது.

மேலும் விவரங்களுக்கு, 98655 35909, 93605 05531 என்கிற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us