UPDATED : அக் 04, 2024 12:00 AM
ADDED : அக் 04, 2024 10:16 AM

கோவை:
பொறியாளர்களுக்கான 1933 காலிப்பணியிடங்களுக்கான மாதிரி நேர்காணல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இன்று நடக்கிறது.
கலெக்டர் கிராந்திகுமார் அறிக்கை:
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அறிவிப்பின் வாயிலாக, உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர், நகர திட்டமிடல் ஆய்வாளர் உள்ளிட்ட பணிகள் அடங்கிய, 1933 பணிக்காலியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டு, கடந்த ஜூன் 29 மற்றும் 30 ஆகிய இரு தினங்கள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இப்பணியிடங்களுக்கான நேர்காணல் அக்., 8 முதல் நடக்கிறது. இதற்கான மாதிரி நேர்காணல் அக்., 4ம் தேதி (இன்று) கோவை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடக்கிறது.
எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற மனுதாரர்கள் கவுண்டம்பாளையத்தை அடுத்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாகவோ அல்லது studycirclecbe@gmail.com என்ற இமெயில் மூலமாகவோ, 9361576081 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு, பயனடையலாம்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.