போதை பாதைக்கு செல்லாமல் தடுக்க பஞ்சாபில் ஆங்கில பயிற்சி
போதை பாதைக்கு செல்லாமல் தடுக்க பஞ்சாபில் ஆங்கில பயிற்சி
UPDATED : ஆக 10, 2024 12:00 AM
ADDED : ஆக 10, 2024 10:31 AM
ஜலந்தர்:
பஞ்சாப் இளைஞர்கள் போதைப் பழக்கத்துக்கு ஆளாகாமல் தடுக்க, பி.எஸ்.எப்., எனப்படும் எல்லைப் பாதுகாப்புப் படை, பயிற்சி அளிக்கிறது.
இதுகுறித்து, எல்லைப் பாதுகாப்புப் படையின் பஞ்சாப் எல்லை ஐ.ஜி., அதுல் புல்செலே கூறியதாவது:
பஞ்சாப் மாநில இளைஞர்கள் போதைப் பழக்கத்துக்கு ஆளாகாமல் இருக்க ஐ.இ.எல்.டி.எஸ்., எனப்படும் சர்வதேச ஆங்கில மொழி சோதனை அமைப்பு வாயிலாக பயிற்சி அளிக்கப்படும்.
வெளிநாடுகளில் படிக்கவோ வேலைக்குச் செல்லவோ திட்டமிட்டால் இந்த அமைப்பு நடத்தும் ஆங்கில மொழி புலமைத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். உலகம் முழுதும் இந்த அமைப்பு நடத்தும் தேர்வை ஆண்டு தோறும் 30 லட்சம் பேர் எழுதுகின்றனர்.
தரன்தரன் மாவட்டம் அமர்கோட்டில் இளைஞர்களுக்கு இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது. கிராமங்களில் வசிக்கும் சில இளைஞர்கள் ஆங்கிலப் பயிற்சி பெற தங்களிடம் பண வசதி இல்லை என 103வது பட்டாலியன் அதிகாரிகளிடம் கூறினர். இதையடுத்து, பி.எஸ்.எப்., இந்தப் பயிற்சியின் நோக்கம் இளைஞர்கள் போதையின் பாதைக்கு செல்லாமல் தடுப்பதே.
இவ்வாறு அவர் கூறினார்.