UPDATED : ஆக 10, 2024 12:00 AM
ADDED : ஆக 10, 2024 10:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
தமிழகத்தில் இன்றும், வரும், 24ம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட நடப்பு கல்வியாண்டுக்கான நாட்காட்டியில், 19 சனிக்கிழமை கள் உட்பட, 220 நாட்கள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், பணிச்சுமையை குறைக்க வேலை நாட்களை குறைக்கும்படி, ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. அதையேற்று கடந்த மாதம், வேலை நாளாக இருந்த, 13ம் தேதி சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது.
அதேபோல, இந்த மாதம் 10 மற்றும் 24ம் தேதிகள், அதாவது இரண்டாவது, நான்காவது சனிக்கிழமைகளில், அனைத்து வகையான பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.