அரசு மகளிர் கல்லுாரியில் மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு
அரசு மகளிர் கல்லுாரியில் மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு
UPDATED : ஜூலை 05, 2024 12:00 AM
ADDED : ஜூலை 05, 2024 10:01 AM
கோவை:
கோவை, புலியகுளம் அரசு மகளிர் கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகளுக்கு, உற்சாக வரவேற்பு நேற்று அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் வீரமணி தலைமை வகித்தார். ராமநாதபுரம் காவல் ஆய்வாளர் சேகர் மற்றும் காவல் துறையினர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற, உளவியல் நிபுணர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், கல்லூரிக்குள் பல்வேறு புதிய கனவுகளோடு வந்திருப்பீர்கள். மாணவிகள் மிகுந்த பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும். அணுகுமுறை, அனுசரித்துச் செல்லுதல், ஏற்றுக்கொள்ளும் பக்குவம் போன்ற நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். பாடங்களை மனப்பாடம் செய்து படிப்பதைவிட புரிந்து படிக்க வேண்டும். கல்வி எனும் ஆயுதம், ஒரு குடும்பத்தை மட்டுமல்ல, சமுதாயத்தையே மாற்றிவிடும், என்றார்.
நிகழ்ச்சியில், 190 முதலாமாண்டு மாணவிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு பேனா, சாக்லேட், ரோஜா பூ, பலூன் ஆகியவற்றைக் கொடுத்து இரண்டாம், மூன்றாமாண்டு மாணவிகள் வரவேற்றனர். அதைத்தொடர்ந்து, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதேபோல, கோவை அரசு கலைக் கல்லூரியிலும், முதலாமாண்டு மாணவ, மாணவிகளுக்குப் பூங்கொத்து கொடுத்து, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.