தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தவறவிடாதீங்க! நுழைவுத்தேர்வு எழுதுவதை மாணவர்களுக்கு வழிகாட்டனும்

தவறவிடாதீங்க! நுழைவுத்தேர்வு எழுதுவதை மாணவர்களுக்கு வழிகாட்டனும்

தவறவிடாதீங்க! நுழைவுத்தேர்வு எழுதுவதை மாணவர்களுக்கு வழிகாட்டனும்


UPDATED : நவ 16, 2026 03:45 PM

ADDED : நவ 16, 2026 03:47 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2026 03:45 PM ADDED : நவ 16, 2026 03:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
பிளஸ் 2 மாணவர்களின் பொதுத் தேர்வுக்கு கொடுக்கும் கவனமும், முன்னணி அரசு கல்வி நிறுவனங்கள் நடத்தும் நுழைவுத் தேர்வுக்கு கொடுக்கப்படுவதில்லை.

ஐ.ஐ.டி., பாம்பே நடத்தும் யு.சி.இ.இ.டி., மூலம் பி.டிசைன் படிப்பிலும், தேசிய சட்டப் பல்கலைகளில் கிளாட், டில்லி தேசிய சட்ட பல்கலையில் ஏ.ஐ.எல்.இ.டி., தேர்வு மூலமும் சேரலாம். யு.பி.எஸ்.சி., நடத்தும் என்.டி.ஏ., மற்றும் என்.ஏ., தேர்வுகள் மூலம் பாதுகாப்புத் துறை அகாடமிகளில் சேர்ந்து அதிகாரிகளாக பயிற்சி பெறலாம்.

ஐ.சி.ஏ.ஆர்., நடத்தும் வேளாண் படிப்புக்கான குறிப்பிட்ட இடங்களுக்கு சி.யு.இ.டி., மதிப்பெண் பயன்படுத்தப்படுகிறது. ஐ.ஐ.எம்., நிறுவனங்களின் ஒருங்கிணைந்த மேலாண்மை படிப்புகளுக்கு ஐ.பி.எம்.ஏ.டி., ஜே.ஐ.பி.எம்.ஏ.டி., தேர்வுகள் உள்ளன.

கட்டடக்கலை படிப்புக்கு நாட்டா, இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் சேர ஐ.எஸ்.ஐ., நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. மும்பை பல்கலை சி.இ.பி.எஸ்., நிறுவனத்தில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த எம்.எஸ்.சி., படிப்பில் சேர நெஸ்ட் தேர்வு நடத்தப்படுகிறது.

இவை தவிர அறிவியல் ஆராய்ச்சி, வடிவமைப்பு, பேஷன், ஹோட்டல் மேலாண்மை, கடல்சார் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வுகள் உள்ளன. பல நுழைவுத் தேர்வுகளுக்கு பிளஸ்2 தேர்ச்சி மட்டுமே போதுமானது.

விழிப்புணர்வு இல்லாததால், பல முன்னணி கல்வி நிறுவனங்களில் பிற மாநில மாணவர்கள் அதிகளவில் சேர்க்கை பெறுகின்றனர். தமிழக மாணவர்கள் உயர்கல்வி வாய்ப்புகளை தவறவிடுகின்றனர்.

இது குறித்து கல்வியாளர் அஸ்வின் கூறியதாவது:


பிளஸ் 2 மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு தயாராகும் அதே சமயம், இதுபோன்ற நுழைவுத் தேர்வுகளிலும் கவனம் செலுத்த வேண்டும். டிசம்பர் முதல் மே வரை தொடர்ந்து பல நுழைவுத்தேர்வு அறிவிப்புகள் வெளியாகும்.

ஒவ்வொரு பள்ளியும் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் வழங்க வேண்டும். பொதுத்தேர்வு முடியும் வரை காத்திருக்காமல், இணையதளங்கள் மூலம் நுழைவுத் தேர்வுகள், விண்ணப்ப முறைகளை முன்கூட்டியே அறிந்து உரிய காலத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us