காலத்திற்கேற்ற கல்வியை அளிக்கும் ஈரோடு கலை அறிவியல் கல்லுாரி
காலத்திற்கேற்ற கல்வியை அளிக்கும் ஈரோடு கலை அறிவியல் கல்லுாரி
UPDATED : ஏப் 30, 2026 05:20 PM
ADDED : ஏப் 30, 2026 05:23 PM
ஈரோடு:
கடந்த 1972ம் ஆண்டில் தொடங்கப்பட்ட, ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி பொன்விழா கடந்து சிறப்பான கல்விப்பணியை ஆற்றி வருகிறது.
அரசியல் அறிவை மாணவர்களுக்கு போதிக்க, பி.ஏ., அரசியல் அறிவியலும் சீருடை பணிகளுக்கு மாணவர்களை தயார் செய்யும் பி.ஏ., பாதுகாப்பு மற்றும் போர்த்திறன் பாடப் பிரிவு, ஈரோடு மாவட்டத்தில் இக்கல்லுாரியில் மட்டுமே போதிக்கப்படுகிறது.
கணினி அறிவியலில் ஆறு பாடப்பிரிவுகள், 300 கணினிகளை கொண்ட ஐந்து கணினி ஆய்வகங்களுடன் செயல்படுகிறது. குறிப்பாக இன்றைய தேவையான செயற்கை நுண்ணறிவுக்கென பி.எஸ்.சி., துறை தனியாக உருவாக்கப்பட்டுள்ளது.
வணிகவியல் துறை ஆறு பிரிவுகளை கொண்டுள்ளது. பொதுபிரிவு, கணினி பயன்பாடு, வங்கியியல் மற்றும் நிதியியல், காப்பீடு, நிறும செயலாண்மை என அனைத்து பாடப்பிரிகளையும் வணிகவியல் துறை உள்ளடக்கியுள்ளது.
உணவு மற்றும் ஊட்டச்சத்து, உயிர் வேதியியல், நுண்ணறிவியல், மொழிஇயல், வரலாறு, ஆடை வடிவமைப்பு என இக்கல்லூரியில் அனைத்து துறை பாட பிரிவுகளும் சிறப்பாக நடைபெறுகிறது. நாக் அமைப்பால் 'ஏ+' தரம் பெற்றது.
முதலாம் ஆண்டு சேரும் மாணவர்களுக்கு கட்டணமில்லாமல் ஆட் ஆன் கோர்ஸ் நடத்தப்படுகிறது. பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கான உதவித்தொகை மதிப்பெண் அடிப்படையில் வழங்கப்படுகிறது.
அத்துடன் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை அளிக்கப்படுகிறது. மேலும் டிரஸ்ட் தேர்வு செய்யும் மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
சென்ற ஆண்டில் மத்திய அரசின் திட்டமான, பிஎம்கேவிஒய் திட்டத்தின் கீழ், 1,000 மாணவர்களுக்கு ரூ.24 லட்சம் செலவில் திறன் மேம்பாட்டு பயிற்சி இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
வேலை வாய்ப்பு மற்றும் தொழில் முன்னேற்ற துறை சார்பாக 1,350 வேலை வாய்ப்புகள் சென்ற ஆண்டில் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இக்கல்லுாரி தாளாளர் கே.கே. பாலுசாமி தலைமையில் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.
