தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வித்தரத்துடன் வேலைவாய்ப்பு வழங்கும் கொங்கு இன்ஜி., கல்லுாரி

கல்வித்தரத்துடன் வேலைவாய்ப்பு வழங்கும் கொங்கு இன்ஜி., கல்லுாரி

கல்வித்தரத்துடன் வேலைவாய்ப்பு வழங்கும் கொங்கு இன்ஜி., கல்லுாரி


UPDATED : ஏப் 30, 2026 05:19 PM

ADDED : ஏப் 30, 2026 05:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 30, 2026 05:19 PM ADDED : ஏப் 30, 2026 05:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:
கொங்கு பொறியியல் கல்லூரி, அகில இந்திய தொழில்நுட்ப கழகத்தின் அங்கீகாரத்துடன் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும், தன்னாட்சி அதிகாரம் பெற்ற கல்லூரியாகும்.

இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறையின் மூலம் ஆண்டுதோறும் வழங்கப்படும் தரவரிசை பட்டியலில் 2025ம் ஆண்டு அகில இந்திய அளவில், 100ல் இருந்து 150வது இடத்திற்குள்ளும் மற்றும் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அமைப்பின் மூலம், 'ஏ++' கிரேடு அங்கீகாரத்தை பெற்று சிறப்புடன் திகழ்கிறது.

இக்கல்லூரியில், 11 இளங்கலை பொறியியல் பாடப்பிரிவு மற்றும் முதுகலை மேலாண்மை துறையும் தேசிய தர நிர்ணயக்குழுவின் அங்கீகாரத்தை பெற்றுள்ளது.

இக்கல்லூரியில், 8,500 மாணவர்கள் பல்வேறு பாடப்பிரிவுகளில் (15 இளங்கலை பொறியியல், மெக்கானிக்கல், சிவில், ஆட்டோமொபைல், மெக்கட்ரானிக்ஸ், இ.சி.இ., சி.எஸ்.இ., ஐ.டி., இ.இ.இ., இ.ஐ.இ., கெமிக்கல், புட்டெக்னாலஜி, ஏ.ஐ.டி.எஸ்., ஏ.ஐ.எம்.எல்., சி.எஸ்.டி., பி.ஆர்க்., மூன்று வருட இளங்கலை பாடப்பிரிவு பி.எஸ்.சி., கம்ப்யூட்டர் சிஸ்டம் டிசைன், இன்பார்மஸன் சிஸ்டம்டிசைன், சாப்ட்வேர் சிஸ்டம் டிசைன், 7 முதுகலை (எம்.இ.,/எம்.டெக்.,), எம்.பி.ஏ., எம்.எஸ்.சி., (சாப்ட்வேர் சிஸ்டம்ஸ்), மற்றும் 16 ஆராய்ச்சி துறைகளில் பயின்று வருகின்றனர்.

சென்ற கல்வியாண்டில், தரம் வாய்ந்த 370க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்களில், இக்கல்லூரியில் பயின்ற 1,693 மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். தொழிற்சாலைகளுடனான கல்லூரியின் தொடர்பை ஊக்குவிக்கும் பொருட்டு ஐ.ஐ.பி.சி., என்ற தனி அமைப்பு செயல்பட்டு வருகின்றது.

இவ்வமைப்பு அகில இந்திய தொழில்நுட்ப கழகத்தின், தொழிற்சாலைகளுடன் தொடர்பில் உள்ள சிறந்த கல்லூரி என்ற விருதை பெற்றுள்ளது. கொங்கு பொறியியல் கல்லூரியின் டெக்னாலஜி பிசினஸ் இன்குபேட்டர் என்ற அமைப்பு, இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகத்திடமிருந்து, 16.5 கோடியை மானியமாக பெற்றுள்ளது.

இதன் மூலம், 152 இளம் தொழில் முனைவோர் பலன் பெற்றுள்ளனர். 2013ம் ஆண்டு இந்தியாவில் சிறந்த இன்குபேட்டர் என்ற விருதை, அன்றைய குடியரசு தலைவரிடமிருந்து பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us