UPDATED : ஜன 20, 2026 12:45 PM
ADDED : ஜன 20, 2026 12:46 PM
பெரம்பூர்:
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி நேற்று துவக்கியது.
பெரம்பூர் பல்லவன் சாலையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 1 பயிலும் 604 மாணவியருக்கு, சைக்கிள்களை, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்.
மேலும், சென்னை மாநகராட்சி பள்ளிகளில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகளில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தையும் அவர் துவக்கி வைத்தார்.
நிகழ்வில், மேயர் பிரியா பேசியதாவது:
பொதுத் தேர்வுக்கு தயாராகி வரும் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர் சிறப்பு வகுப்புகளில் பங்கேற்கின்றனர். அவர்களுக்கு மாலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கும் திட்டம் இன்று துவக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம், 12,558 பேர் பயன் பெறுவர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி, மாணவ, மாணவியர் நன்றாக படித்து உயர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

