தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேசிய மாணவர் மாநாட்டில் விருதுகளை குவித்த எக்ஸல் பொறியியல் கல்லுாரி

தேசிய மாணவர் மாநாட்டில் விருதுகளை குவித்த எக்ஸல் பொறியியல் கல்லுாரி

தேசிய மாணவர் மாநாட்டில் விருதுகளை குவித்த எக்ஸல் பொறியியல் கல்லுாரி


UPDATED : மார் 11, 2026 12:42 PM

ADDED : மார் 11, 2026 12:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 11, 2026 12:42 PM ADDED : மார் 11, 2026 12:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குமாரபாளையம்:
குமாரபாளையம், எக்ஸல் பொறியியல் கல்லுாரிக்கு (தன்னாட்சி) இந்திய தொழில்நுட்ப கல்வி சங்கம் சார்பில், மகேந்திரா பொறியியல் கல்லுாரியில் நடந்த தேசிய மாணவர் மாநாட்டில், பல்வேறு பிரிவுகளின் கீழ், சிறப்பான சாதனையை பதிவு செய்து பல விருதுகளை பெற்றது.

கல்லுாரி முதல்வர் பொம்மண்ண ராஜா, கல்லுாரியின் செயல்பாடுகளுக்கு சிறப்பான ஆதரவு அளித்ததற்காக, 'பெஸ்ட் சப்போர்டிங் காலேஜ் அவார்ட்' என்ற விருதை பெற்றார். எக்ஸல் பொறியியல் கல்லுாரியின், இந்திய தொழில்நுட்ப கல்வி சங்க ஒருங்கிணைப்பாளார் சஞ்சய், சிறந்த ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டு, 'பெஸ்ட் ஐ.ஸ்.டி.இ., ஒருங்கிணைப்பாளர்' விருதை பெற்றார்.

அதே போல், எக்ஸல் பொறியியல் கல்லுாரியை சேர்ந்த ஜீவப்ரியா, 4ம் ஆண்டு - விமானவியல் பொறியியல்; மஞ்சுகுமாரன், 4ம் ஆண்டு - கணினி அறிவியல் மற்றும் பொறியியல்; அமர்தீன், 4ம் ஆண்டு - மின்னணு மற்றும் தொடர்பியல் பொறியியல் ஆகிய மாணவர்கள் தங்களது திறமையான செயல்பாடுகளுக்காக, 'பெஸ்ட் ஐ.ஸ்.டி.இ., மாணவர்' விருதுகளை பெற்றனர்.

இந்திய தொழில்நுட்ப கல்வி சங்க தமிழ்நாடு மாநில தலைவர் முனைவர் சங்கர சுப்பிரமணியன், விருதுகளை வழங்கி பாராட்டினார். இச்சாதனையை பாராட்டும் விதமாக, எக்ஸல் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் பேராசிரியர் நடேசன், துணைத் தலைவர் மருத்துவர் மாதன் கார்த்திக் ஆகியோர் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us