உடுமலை அரசு கலைக்கல்லுாரியில் விண்ணப்ப பதிவு காலம் நீட்டிப்பு
உடுமலை அரசு கலைக்கல்லுாரியில் விண்ணப்ப பதிவு காலம் நீட்டிப்பு
UPDATED : மே 24, 2024 12:00 AM
ADDED : மே 24, 2024 12:00 PM

உடுமலை:
உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், இளநிலை மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பபதிவு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், இளநிலை மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த 6ம் தேதி முதல் நடக்கிறது. விண்ணப்ப பதிவு www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக நடக்கிறது. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, 20ம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது விண்ணப்ப பதிவுக்கு கால அவகாசம், மே 24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்களுக்கான தரவரிசைப்பட்டியல் மே 27ம் தேதி அந்தந்த கல்லுாரிகளுக்கு அனுப்பப்படுகிறது. மாணவர்கள் கல்லுாரி இணையதளத்திலும் தரவரிசையை அறிந்துகொள்ளலாம். மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள், தேசிய மாணவர் படை மாணவர்கள், பாதுகாப்பு படை வீரர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என சிறப்பு ஒதுக்கீடு மாணவர்களுக்கான கலந்தாய்வு, மே 28ம் தேதி துவங்கி, 30ம் தேதி வரை நடக்கிறது.
பொதுப்பிரிவு மாணவர்களுக்கான முதற்கட்ட கலந்தாய்வு, ஜூன் 10 முதல் 15ம் தேதி வரை நடக்கிறது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூன் 24 முதல் 29ம் தேதி வரை நடக்கிறது. இளநிலை முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூலை 3ம்தேதி முதல் துவங்குகிறது.