UPDATED : டிச 01, 2025 07:43 AM
ADDED : டிச 01, 2025 07:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 2,708 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்பும் செயல்முறையில், பணி அனுபவச் சான்றிதழ் பதிவேற்றக் காலக்கெடு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 30 நவம்பர் வரை வழங்கப்பட்ட காலக்கெடு,தற்போது டிசம்பர் 5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. அனுபவச் சான்றிதழ்கள் உரிய அலுவலர்களால் சரிபார்க்கப்பட்ட நகல்களாக மட்டுமே பதிவேற்றப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

