UPDATED : டிச 01, 2025 07:44 AM
ADDED : டிச 01, 2025 07:45 AM
மதுரை:
''தன்னம்பிக்கையுடன் முயற்சியும் பயிற்சியும் இருந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம்,'' என, மதுரையில் நடந்த கருத்தரங்கில் அமெரிக்கன் கல்லுாரி ஓய்வு பெற்ற பொருளாதாரத்துறை தலைவர் முத்துராஜா பேசினார்.
திருப்பாலை யாதவர் கல்லுாரியில் தேசிய மாணவர் படையினருக்கான வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்துவது தொடர்பான கருத்தரங்கம் நடந்தது. அதில் முத்துராஜா பேசியதாவது: மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற, திறன் மிகுந்த கல்வி, தகுந்த வேலைவாய்ப்பு தேவை. பட்டப்படிப்பு தொடர்புடைய வேலைத்திறன் பயிற்சிகளை முழுமனதுடன் கற்க வேண்டும். பாடத்தில் புலமை, மொழித்திறன், கேள்வி கேட்டல், விவாதித்தல், தகவல் பரிமாற்றம், கணினி சார்ந்த தொழில்நுட்பம் உள்ளிட்ட திறன்கள் இன்றைய சூழலில் தகுதிமிக்க வேலைவாய்ப்புகளை பெற உதவுகிறது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் மத்திய மாநில அரசுகள் வழங்கும் கல்வி, போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்கான பயிற்சிகள், வேலைவாய்ப்பு வசதிகளை பயன்படுத்த வேண்டும் என்றார். பல்வேறு பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

