என்.டி.ஏ., தேர்வுகளில் முகத்தோற்றம் 'டிஜிட்டல்' முறையில் சரிபார்ப்பு
என்.டி.ஏ., தேர்வுகளில் முகத்தோற்றம் 'டிஜிட்டல்' முறையில் சரிபார்ப்பு
UPDATED : டிச 26, 2025 11:16 AM
ADDED : டிச 26, 2025 11:20 AM

சென்னை:
தேசிய தேர்வு முகமையான என்.டி.ஏ., நடத்தும் நுழைவு தேர்வுகளில் பங்கேற்கும் தேர்வர்களின் முகத்தோற்றத்தை கண்டறிய, 'டிஜிட்டல்' முறை பயன்படுத்தப்பட உள்ளது.
இன்ஜினியரிங், மருத்துவம் உள்ளிட்ட தொழில்முறை படிப்புகளில் சேர்வதற்கான நுழைவு தேர்வுகளை, என்.டி.ஏ., எனும் தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.
இதில், ஆள்மாறாட்டம் செய்யப்பட்டது குறித்து, கடந்தாண்டு புகார்கள் எழுந்த நிலையில், இந்தாண்டு முதல், தேர்வர்களின் முகத்தை, டிஜிட்டல் முறையில் அடையாளம் காணும் வகையில், புதிய நடைமுறை அறிமுகம் செய்யலாம் என, இந்திய விண்வெளி ஆய்வு மையமான 'இஸ்ரோ' முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழு பரிந்துரைத்தது.
அதை, என்.டி.ஏ., ஏற்றுள்ளது. ஜனவரியில் நடக்க உள்ள ஜே.இ.இ., நுழைவுத்தேர்வில், இந்த புதிய முறை அமலாக உள்ளது.

