பி.எம்.சி., டெக் கல்லுாரியில் ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி
பி.எம்.சி., டெக் கல்லுாரியில் ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி
UPDATED : ஜன 15, 2026 04:05 PM
ADDED : ஜன 15, 2026 04:09 PM

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பெருமாள் மணிமேகலை பாலிடெக்னிக் கல்லுாரியில், இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அங்கமான, ஐ.சி.டி., அகாடமி நிறுவனத்துடன் இணைந்து, 'செமி கண்டக்டர் டிவைசஸ் பேப்ரிகேஷன் அண்ட் லேஅவுட் டிசைன்' என்ற தலைப்பில், 5 நாள் ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி நடந்தது. பி.எம்.சி., டெக் கல்வி நிறுவனங்கள் தலைவர் குமார் தலைமை வகித்தார்.
செயலாளர் மலர், அறங்காவலர் சசிரேகா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். இயக்குனர் சுதாகரன், முதல்வர் பாலசுப்பிரமணியம், மேலாளர் கிருஷ்ணன் பேசினர். பெங்களூரு கோல்டன் பேரல் டெக்னாலஜிஸ் நிறுவன அனலாக் வடிவமைப்பு பொறியாளர் சிவயோகி என்.ரிட்டி, பயிற்சியை துவக்கி வைத்தார். ஐ.சி.டி., அகாடமி மண்டல மேலாளர் சந்துரு, ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதேவி ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

