UPDATED : ஜன 15, 2026 04:03 PM
ADDED : ஜன 15, 2026 04:05 PM
கோவை: கோவை, மத்திய வேளாண் பொறியியல் நிறுவனத்தில், பழங்குடி இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதில், 15 பேர் வேலைவாய்ப்பு பெற்றனர்.
தமிழக அரசின் பழங்குடியினர் நலத்துறை நிதியுதவியுடன் 18 - 35 வயதுக்கு உட்பட்ட படித்த மற்றும் படிப்பை இடைநிறுத்திய பழங்குடி இளைஞர்களுக்கு சுயதொழில் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்கம் நோக்கில், திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டது.
டிராக்டர், பவர் டிரில்லர், உழவு, விதைப்பு, களை, அறுவடை, டிரோன், அறுவடைக்குப் பிந்தைய மதிப்பூட்டும் கருவிகள் தொடர்பான பழுதுபார்க்கும் பயிற்சி ஒரு மாதத்துக்கு வழங்கப்பட்டது.
25 பேர் பயிற்சியில் பங்கேற்ற நிலையில், வளாகத் தேர்வில் 15 பேர், வேளாண் கருவிகள் உற்பத்தி நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றனர்.
நிறைவு விழாவில், மத்திய வேளாண் பொறியியல் நிறுவன கோவை தலைவர் ரவீந்தர நாய்க், பயிற்சி ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ்ச்செல்வன், வேளாண் பல்கலை பண்ணை இயந்திரவியல் துறைத் தலைவர் கவிதா, முதன்மை விஞ்ஞானி செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

