தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/போலி துாதரக சான்றிதழ்: 44 பேர் விண்ணப்பம் ரத்து

போலி துாதரக சான்றிதழ்: 44 பேர் விண்ணப்பம் ரத்து

போலி துாதரக சான்றிதழ்: 44 பேர் விண்ணப்பம் ரத்து


UPDATED : நவ 27, 2024 12:00 AM

ADDED : நவ 27, 2024 10:09 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 27, 2024 12:00 AM ADDED : நவ 27, 2024 10:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழகத்தில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு, 1,800 இடங்கள் உள்ளன. இவற்றில், 50 சதவீத இடங்கள் அரசு டாக்டர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள 50 சதவீத இடங்கள், பொது கவுன்சிலிங் வாயிலாக நிரப்பப்படுகின்றன.

அதன்படி, 2024 - 25ம் கல்வியாண்டுக்கான முதுநிலை மாணவர் சேர்க்கை, ஆன்லைன் முறையில் நடந்து வருகிறது. கவுன்சிலிங்கின் ஒரு பகுதியாக, மாணவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது.

இதில், வெளிநாடு வாழ் இந்தியருக்கான என்.ஆர்.ஐ., பிரிவில் விண்ணப்பித்த 44 பேர் போலி துாதரக சான்றிழ்கள் சமர்ப்பித்திருப்பது தெரியவந்துள்ளது.

மருத்துவ மாணவர் சேர்க்கை குழு செயலர் அருணலதா கூறியதாவது:

மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை வெளிப்படை தன்மையுடன் நடந்து வருகிறது. மாணவர்களின் சான்றிதழ்கள், ஆவணங்களின் உண்மை தன்மையை ஆய்வு செய்ததில், இளநிலை படிப்பில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்திருந்த ஆறு பேரின் துாதரக சான்றிதழ்கள் போலியானவை என்பது கண்டறியப்பட்டது.

அதேபோல, முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில், என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டில் விண்ணப்பித்திருந்த 44 பேரின் துாதரக சான்றிதழ்கள் போலியானவை என கண்டறியப்பட்டது.

அந்த விண்ணப்பங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து, சட்ட ஆலோசனை கோரப்பட்டுள்ளது. அதன்பின், போலீசில் புகார் அளிக்கப்படும்.

இவ்வாறு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us