தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேளாண் மாணவிகளுக்கு கள பயிற்சி மதிப்பீட்டு தேர்வு

வேளாண் மாணவிகளுக்கு கள பயிற்சி மதிப்பீட்டு தேர்வு

வேளாண் மாணவிகளுக்கு கள பயிற்சி மதிப்பீட்டு தேர்வு


UPDATED : பிப் 07, 2026 10:19 AM

ADDED : பிப் 07, 2026 10:20 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 07, 2026 10:19 AM ADDED : பிப் 07, 2026 10:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி:
வேளாண் இறுதியாண்டு மாணவிகளுக்கு களப்பயிற்சி தொடர்பாக மதிப்பீட்டு தேர்வு தேனி வேளாண் இணை இயக்குநர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது.

மதுரை வேளாண் கல்லுாரி இறுதியாண்டு மாணவிகளுக்கு நடந்த மதிப்பீட்டு தேர்வை பேராசிரியர்கள் வேலுச்சாமி, ராமகிருஷ்ணன், மாரீஸ்வரி தேர்வை நடத்தினர்.
பேராசிரியர்கள் கூறுகையில், 'வேளாண் இறுதியாண்டு மாணவர்களுக்கு கிராம தங்கல் திட்டத்தின் கீழ் களப்பயிற்சி 90 நாட்களுக்கு அளிக்கப்படுகிறது.
தேனி மாவட்டத்தில் மதுரை கல்லுாரியை சேர்ந்த 65 மாணவிகள் 7 குழுக்களாக தங்கி பயிற்சி பெற்றும், விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்பங்கள் பற்றி விளக்கி வருகின்றனர். அவர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் நிறைவடைந்துள்ளன.
அவர்கள் கற்றுக்கொண்ட விவரங்கள், தகவல்களை மதிப்பீட்டு தேர்வில் தெரிவித்தார்கள். அடுத்தது வேளாண் பொருட்கள் மதிப்புக்கூட்டல் தொடர்பாக வேளாண் உற்பத்தியாளர் சங்கங்களில் பயிற்சி பெற உள்ளார்கள்,' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us