UPDATED : நவ 19, 2024 12:00 AM
ADDED : நவ 19, 2024 08:46 AM

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பல்வேறு பிரிவுகளை புரிந்துகொள்ளவும், அவைகளின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தவும், வரலாற்று சிறப்பு மிக்க விவாதங்கள் பற்றி எடுத்துரைக்கவும் இந்தியாவின் முதல் அரசியலமைப்பு அருங்காட்சியகத்தை, ஹரியானா மாநிலத்தின் சோனிபட் நகரில் அமைந்துள்ள ஜிண்டால் குளோபல் பல்கலை நிறுவுகிறது.
'கடந்த 75 ஆண்டுகளாக நம் நாட்டின் அரசியலமைப்பு சட்டம் கடந்து வந்த பாதையை எடுத்துக்காட்ட ஆர்வமூட்டும் சாதனங்கள், காட்சிப்பொருட்கள் மற்றும் 'இன்டராக்டிவ் டிஸ்பிளே'க்களை இந்த அருங்காட்சியகம் கொண்டிருக்கும். வாசகம், ஒலி, ஒளி காட்சி என பல வடிவங்களின் வாயிலாக, அரசியலமைப்பு சட்டத்தின் ஒவ்வொரு பிரிவின் முக்கியத்துவமும் விளக்கப்படுகிறது.
அருங்காட்சியகத்தை பார்வையிடுபவர்களுக்கு 'ரோபோ'வின் வாயிலாக தனித்துவமான அனுபவத்தை வழங்கும் வகையில், சென்னை ஐ.ஐ.டி., மற்றும் ஓபி ஜிண்டால் குளோபல் பல்கலை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது', என்று பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜ்குமார் குறிப்பிட்டுள்ளார்.