மிருதங்க இசையில் முதலிடம்: பள்ளி மாணவனுக்கு பாராட்டு
மிருதங்க இசையில் முதலிடம்: பள்ளி மாணவனுக்கு பாராட்டு
UPDATED : அக் 12, 2026 07:43 PM
ADDED : அக் 12, 2026 07:44 PM
கோவை:
பள்ளி கல்வித்துறை சார்பில் தஞ்சாவூரில் சமீபத்தில் மாநில அளவிலான கலைத்திருவிழா நடந்தது. இதில் இளையோர் திறன் போட்டியில் வையம்பாளையம் சுதந்திரா அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் பிரகதீஷ், இசைக்கருவிகள் இசைத்தல் பிரிவில், மாநில அளவில் முதல் இடம் பிடித்துள்ளார்.
தனது குரு ஈஸ்வரனிடம் பள்ளிப் பருவத்திலேயே கற்ற இசையே தனக்கு கைகொடுத்தது என்கிறார் பிரகதீஷ்.
கோயில் நிகழ்ச்சிகள், மேடை நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் பெரிய வித்வான்களுக்கும் பக்கவாத்தியம் வாசிப்பதுண்டாம்.
இவரது திறமையை கண்ட பள்ளி இசை ஆசிரியர் ஜெயலட்சுமி, சில நாட்களுக்கு முன் தஞ்சாவூரில் நடந்த மாநில அளவிலான கலைத் திருவிழாவில் பங்கேற்க வைத்து, திறமையை வெளியுலகம் அறிய செய்துள்ளார்.
பிரகதீஷை பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் பாராட்டினர்.
