UPDATED : அக் 12, 2026 11:48 AM
ADDED : அக் 12, 2026 11:49 AM

சென்னை ஐ.ஐ.டி.,யில் உள்ள, சுதா கோபாலகிருஷ்ணன் மூளை ஆராய்ச்சி மையம், 2022 மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. இது, மனித மூளையின் கட்டமைப்பு மற்றும் அதன் நரம்பு இணைப்புகளை, நுண்ணிய அளவில், துல்லிய வரைபடமாக தயாரிப்பதற்கான, உலகளாவிய மையமாக உள்ளது.
இங்கு, கரு பருவம் முதல் முதுமை பருவம் வரை, வயது வாரியாக, மனித மூளைகள் குறித்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த மையத்தை, பிரதமர் மோடி பார்வையிட்டார். 100க்கும் மேற்பட்ட மனித மூளைகளை, 'செல்' மட்டத்தில் வரைபடமாக்கும், உலகளாவிய திட்டத்தை அவர் வெளியிட்டார்.
மேலும், 'சி - ஸ்ட்ரோக்' என்ற பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட, மூளையிலிருந்து எடுக்கப்பட்ட, 1,000க்கும் மேற்பட்ட தரவுகள், வரைபடங்கள் அடங்கிய நுாலையும் அவர் வெளியிட்டார்.
ஆய்வு மையத்தின் செயல்பாடுகள் குறித்து, ஆராய்ச்சியாளர்களிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். உடன், கவர்னர் ராஜேந்திர அர்லேகர், முதல்வர் விஜய் இருந்தனர்.
