UPDATED : மே 24, 2024 12:00 AM
ADDED : மே 24, 2024 11:54 AM

விழுப்புரம்:
விழுப்புரம் நகராட்சி திடலில் முதன்முறையாக கண் கவரும் ஆழ்கடல் கண்ணாடி குகை மீன்களின் கண்காட்சி மற்றும் பிரம்மாண்ட பொருட்காட்சி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்துள்ளது.
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகேவுள்ள நகராட்சி மைதானத்தில் முதன் முறையாக கண் கவரும் ஆழ்கடல் கண்ணாடி குகை மீன்களின் கண்காட்சி மற்றும் பொருட்காட்சி நடக்கிறது.
கடந்த 1ம் தேதி முதல் நடந்தும் வரும் இக்கண்காட்சியில் பல வண்ண வகை மீன்கள் ஆழ்கடலில் மிதந்து செல்வது போன்ற காட்சிகள் கண்ணாடி குகை வழியாக பொதுமக்கள் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பொழுது போக்கு பூங்கா, உணவு திருவிழா, நுகர்வோருக்கான ஸ்டால், ஷாப்பிங் செய்வதற்கான அனைத்தும் வசதிகளும் இங்குள்ளது. தினமும் மாலை 4:00 மணி முதல் இரவு 10.00 மணி வரை நடக்கும் இப்பொருட்காட்சியை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் குடும்பத்தோடு வந்து கண்டுகளித்து செல்கின்றனர்.
தினந்தோறும் வரும் 10 பேருக்கு குலுக்கள் முறையில் சேலை பரிசாக வழங்கப்படுகிறது. அனைவரையும் கவரும் வகையில் ஒட்டக சவாரியும் உள்ளது. விழுப்புரத்தில் இந்த ஆழ்கடல் கண்ணாடி குகை மீன் கண்காட்சி பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.