UPDATED : ஆக 05, 2024 12:00 AM
ADDED : ஆக 05, 2024 09:01 AM
திருப்பூர்:
திருப்பூர், முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லுாரி வணிகவியல் துறை சார்பில், காம் பெஸ்ட் - 24 என்கிற பெயரில், உணவுப்பொருட்கள் வர்த்தக திருவிழா நேற்று நடைபெற்றது.
கல்லுாரி நிர்வாக குழு உறுப்பினர் ராமசாமி, துவக்கி வைத்தார். வணிக வியல் மாணவ, மாணவியர் 200 பேர் இணைந்து, 24 உணவு விற்பனை ஸ்டால் மற்றும் தலா ஒரு புத்தக ஸ்டால், ஜவுளி விற்பனை ஸ்டால் அமைத்திருந்தனர்.
கல்லுாரி முதல்வர் பாலகிருஷ்ணன், வணிகவியல் துறை தலைவர் கலையரசி, ஒருங்கிணைப்பாளர்கள் ராஜசேகர், சரண்யா மற்றும் அனைத்து துறை பேராசிரியர்கள், மாணவ, மாணவியர், அரங்குகளை பார்வையிட்டனர்; உணவு பதார்த்தங்களை விலை கொடுத்து வாங்கி, ருசித்தனர். ஸ்டால் அமைத்திருந்த மாணவர்கள், மொத்தம், ஒரு லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் செய்து அசத்தினர்.
மாணவர் மத்தியில் தொழில்முனைவோராக மாறவேண்டும் என்கிற ஆர்வத்தை துாண்டும் வகையிலும், ஒரு பொருளை எப்படி சந்தைப்படுத்தவேண்டும் என்கிற நுணுக்கங்களை அறிந்து கொள்ளும் வகையிலும், இந்த வர்த்தக திருவிழா நடத்தப்பட்டதாக, பேராசிரியர்கள் தெரிவித்தனர்.