முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாள்: நினைவகத்தில் அஞ்சலி
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாள்: நினைவகத்தில் அஞ்சலி
UPDATED : அக் 16, 2024 12:00 AM
ADDED : அக் 16, 2024 09:23 AM

ராமேஸ்வரம்:
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் 93-வது பிறந்த நாளையொட்டி அவரது நினைவகத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் உள்ள அவரது தேசிய நினைவகத்தில் கலாமின் பேரன் ேஷக்சலீம், உறவினர்கள் நஜீமா மரைக்காயர், ஜெயினுலாபுதீன் மற்றும் ராமேஸ்வரம் ஜமாத் நிர்வாகிகள் துஆ செய்து மலர் துாவி அஞ்சலி செலுத்தினார்கள்.
இதனைத்தொடர்ந்து கலெக்டர் சிம்ரன்ஜித் காலோன், ராமேஸ்வரம் ரோட்டரி சங்க முன்னாள் செயலாளர் நாகராஜ், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
நேற்று காலை கலாம் நினைவகத்தில் இருந்து பாம்பன் மற்றும் மண்டபம் கடற்கரை பூங்கா வரை ஆண்கள், பெண்கள், மாணவர்களுக்கு மாரத்தான் போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்ற வீரர்கள், வீராங்கனைகள், மாணவர்களுக்கு கலெக்டர் சிம்ரன்ஜித் காலோன் பரிசுகள் வழங்கினார்.
திருப்புல்லாணி
ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அறக்கட்டளை சார்பில் அப்துல் கலாம் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திருப்புல்லாணி யூனியன் பி.டி.ஓ., ராஜேஸ்வரி தலைமை வகித்தார். துணை பி.டி.ஓ., விஜயகுமார் முன்னிலை வகித்தார். பள்ளியில் தையல் பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
அப்துல் கலாம் அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. திருப்புல்லாணி ஆர்.ஐ., கிருஷ்ணமூர்த்தி, சுகாதாரத்துறை ஜெயக்கொடி, ஏ.பி.ஜே., உதவும் கரங்கள் நிறுவனர் சாகுல் ஹமீது, சமூக ஆர்வலர் பாபு, பாக்கியா உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை அப்துல் கலாம் அறக்கட்டளை நிறுவனர் விக்னேஷ் செய்திருந்தார்.