வேளாண் பல்கலை வட்டாரத்தில் கிடைத்தது 68.60 மி.மீ., மழை
வேளாண் பல்கலை வட்டாரத்தில் கிடைத்தது 68.60 மி.மீ., மழை
UPDATED : அக் 16, 2024 12:00 AM
ADDED : அக் 16, 2024 09:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:
நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், 27 மி.மீ., அடிவாரத்தில், 20 மி.மீ., மழை பதிவானது.
குடிநீர் தேவைக்காக, 9.81 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு, கோவை மாநகராட்சி பகுதி மற்றும் வழியோர கிராம மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது. 42.64 அடியாக நீர்மட்டம் உயர்ந்திருக்கிறது.
மாவட்டத்தின் பிற பகுதிகளில் பெய்த மழை அளவு:
பீளமேடு - 22.70 மி.மீ., வேளாண் பல்கலை., - 68.60, பெரியநாயக்கன் பாளையம் - 34.60, பில்லுார் அணை - 12, அன்னுார் - 10.20, கோவை தெற்கு - 19, சூலுார் - 22.20, வாரப்பட்டி - 64, தொண்டமுத்துார் - 11, மதுக்கரை - 12, போத்தனுார் - 14,80. கிணத்துக்கடவு - 14, சின்கோனா - 14, சின்னக்கல்லார் - 47, வால்பாறை - 23, சோலையாறு 13 மி.மீ., மழை பதிவானது.