தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வினியோகம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வினியோகம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வினியோகம்


UPDATED : ஜன 06, 2026 07:17 PM

ADDED : ஜன 06, 2026 07:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 06, 2026 07:17 PM ADDED : ஜன 06, 2026 07:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்போரூர்:
திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளில், இலவச சைக்கிள் வழங்கும் விழா, நேற்று நடந்தது.

தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய மூன்று மேல்நிலைப் பள்ளி மாணவ - மாணவியருக்கு, இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

கேளம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், ஊராட்சி தலைவர் ராணி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக திருப்போரூர் தி.மு.க., எம்.எல்.ஏ., பாலாஜி, திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன் பங்கேற்று பிளஸ் - 1 பயிலும், 181 மாணவ - மாணவியருக்கு, இலவச சைக்கிள் வழங்கினர்.

அதேபோல், திருப்போரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில், 197 மாணவர்களுக்கு எம்.எல்.ஏ., பாலாஜி, ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன், பேரூராட்சி தலைவர் தேவராஜ் ஆகியோர் இலவச சைக்கிள் வழங்கினர்.

செம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில், எம்.எல்.ஏ., பாலாஜி, ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன், தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலர் சேகர் ஆகியோர் பங்கேற்று 124 மாணவ - மாணவியருக்கு, இலவச சைக்கிள் வழங்கினர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us