கல்வியாண்டில் 4,040 பேருக்கு விலையில்லா சைக்கிள்; அமைச்சர் தகவல்
கல்வியாண்டில் 4,040 பேருக்கு விலையில்லா சைக்கிள்; அமைச்சர் தகவல்
UPDATED : ஆக 31, 2024 12:00 AM
ADDED : ஆக 31, 2024 10:04 AM

குன்னுார்:
நடப்பு கல்வி ஆண்டில் 4040 மாணவ, மாணவியருக்கு விலை இல்லா சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளது என சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
குன்னுார் மரியன்னை மேல்நிலை பள்ளியில், அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது.
அதில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமை வகித்து பேசியதாவது:
மாநிலத்தில் உள்ள குக்கிராமங்களில் நோயால் பாதிக்கப்படும் மக்களின் சிரமத்திற்கு தீர்வு காண ஆரம்ப சுகாதார நிலையங்கள் போதுமான அளவில் திறக்கப்பட்டு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஊட்டியில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவ கல்லுாரியில் படிக்கும் மருத்துவ மாணவர்கள் 3வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளனர். விரைவில் பணிகள் முடிந்ததும் பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
நீலகிரியில் பள்ளி கல்வித்துறை சார்பில் கடந்த, 3 ஆண்டுகளில் 6.68 கோடி ரூபாய் மதிப்பில், 13 ஆயிரத்து 571 மாணவ, மாணவருக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன.
நடப்பு கல்வி ஆண்டில், 4,040 மாணவ மாணவியருக்கு, 1.94 கோடி ரூபாய் மதிப்பீட்டு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக, 27 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 562 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லாத மிதிவண்டிகளை வழங்கப்பட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, கால்நடைகளுக்காக நடமாடும் கால்நடை மருத்துவ வாகன இயக்கத்தை துவக்கி வைத்தார். எடப்பள்ளி இந்திரா நகரில், 10.95 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட விவசாய பொருட்கள் சேமிப்பு கிடங்கை விவசாய பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா உட்பட பலர் பங்கேற்றனர்.