எழுத்தறிவு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி; பள்ளிகளில் கொண்டாட அறிவுறுத்தல்
எழுத்தறிவு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி; பள்ளிகளில் கொண்டாட அறிவுறுத்தல்
UPDATED : ஆக 31, 2024 12:00 AM
ADDED : ஆக 31, 2024 10:05 AM

உடுமலை:
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், எழுத்தறிவு விழிப்புணர்வு வாரவிழா கொண்டாடுவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ், 15 வயதுக்கும் மேற்பட்ட கற்றல் அறிவு இல்லாதவர்களுக்கு அடிப்படை கல்வி கற்பிக்கப்படுகிறது.
கடந்த இரண்டு கல்வியாண்டுகளாக, திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பகுதிகளிலும் கல்லாதோர் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு தன்னார்வலர்கள் வாயிலாக, கல்வி கற்பிக்கப்படுகிறது. கல்வியாண்டின் இறுதியில் அவர்களுக்கான தேர்வு நடத்தப்படுகிறது.
தமிழகத்தை, நுாறு சதவீதம் எழுத்தறிவு பெற்ற மாநிலமாக மாற்றுவதற்கான நோக்கத்துடன் செப்., மாதம் வரும் எழுத்தறிவு தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துவதற்கு பள்ளிகளில் அறிவுறுத்தப்பட்டுள்ளது..
இதன்படி செப்., 1ம் தேதி முதல், 8ம் தேதி வரை புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் உள்ள கற்போருக்கு, விழிப்புணர்வு போட்டிகள் நடத்துவதற்கும், பேரணி, மரம் நடுதல், கலைநிகழ்ச்சிகள் பள்ளிகளில் நடத்துவதற்கும் வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், இந்த நிகழ்ச்சிகளில் பள்ளி மாணவர்கள், தன்னார்வலர்களைம் பங்கேற்கவும் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.