UPDATED : ஜன 02, 2025 12:00 AM
ADDED : ஜன 02, 2025 10:59 AM
திருப்பூர்:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு, தாட்கோ வாயிலாக, டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2 மற்றும் குரூப் - 2ஏ தேர்வுகளுக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. குரூப் - 2, 2ஏ முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று, முதன்மை தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இப்பயிற்சி அளிக்கப்படுகிறது.
பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும், 21 முதல் 32 வயது நிரம்பிய ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினராக இருக்கவேண்டும். விடுதியில் தங்கி படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவின தொகையும் தாட்கோமூலம் வழங்கப்படும். www.tahdco.com என்கிற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
கூடுதல் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும் தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகலாம். 94450 29552, 0421 2971112 என்கிற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.