மாணவர்கள், பணியாளர்கள் ரூ.ஏழு லட்சம் கொடிநாள் நிதி
மாணவர்கள், பணியாளர்கள் ரூ.ஏழு லட்சம் கொடிநாள் நிதி
UPDATED : ஜன 02, 2025 12:00 AM
ADDED : ஜன 02, 2025 10:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:
கோவை ரூட்ஸ் குரூப் நிறுவனப் பணியாளர்கள் மற்றும் சச்சிதானந்த ஜோதி நிகேதன் சர்வதேச பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவியர் சார்பில், கொடிநாள் நிதி வழங்கப்பட்டது.
கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமாரிடம், ரூட்ஸ் குரூப் நிறுவனங்களின், மனித வள மேம்பாட்டுத்துறை இயக்குனர் கவிதாசன், கொடிநாள் நிதி வழங்கினார். ரூட்ஸ் நிறுவனப் பணியாளர்கள் சரவணன், செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதேபோல் சச்சிதானந்த ஜோதி நிகேதன் சர்வதேச பள்ளியின் சார்பில், முதல்வர் உமா மகேஸ்வரி மற்றும் மாணவர்களும், கொடிநாள் நிதி வழங்கினர். மொத்தம், ரூ.7,03,717 வழங்கப்பட்டது.