UPDATED : ஜன 10, 2026 09:05 AM
ADDED : ஜன 10, 2026 09:06 AM
மோகனுார்:
'உலகம் உங்கள் கையில்' என்ற திட்டத்தின் கீழ், அரசு கல்லூரி மாணவர்களுக்கு, லேப்டாப் வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக நாமக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளில் படிக்கும், 3,201 மாணவர்களுக்கு லேப்டாப் ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதற்கட்டமாக, 1,154 பேருக்கு வழங்கப்பட்டது.
நேற்று மோகனுார் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் 104 மாணவ மாணவியருக்கு லேப்டாப் வழங்கப்பட்டது. டி.ஆர்.ஓ., சரவணன் தலைமையில் நடந்த விழாவில், நாமக்கல் எம்.எல்.ஏ., ராமலிங்கம் முன்னிலை வகித்தார்.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஷ்குமார் எம்.பி., கலந்துகொண்டு மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கினார். மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் நவலடி, கல்லூரி முதல்வர் பிரபாகரன், துறைத்தலைவர் குணசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

