தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாவை பொறியியல் கல்லூரியில் சர்வதேச தொழில்நுட்ப கருத்தரங்கு

பாவை பொறியியல் கல்லூரியில் சர்வதேச தொழில்நுட்ப கருத்தரங்கு

பாவை பொறியியல் கல்லூரியில் சர்வதேச தொழில்நுட்ப கருத்தரங்கு


UPDATED : ஜன 10, 2026 08:54 AM

ADDED : ஜன 10, 2026 08:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 10, 2026 08:54 AM ADDED : ஜன 10, 2026 08:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்:
நாமக்கல், பாவை பொறியியல் கல்லூரியில் சர்வதேச அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கு 'தலைமைத்துவம் 4.0 - புதிய பரிணாமம்; டிஜிட்டல் யுகத்திற்கான வளர்ந்து வரும் மேலாண்மை' என்ற தலைப்பில் நடந்தது.

பாவை கல்வி நிறுவனங்களின் நிறுவனர், தலைவர் ஆடிட்டர் நடராஜன் தலைமை வகித்து பேசினார். முதலாமாண்டு மேலாண்மை துறை மாணவி பிரித்தி வரவேற்றார். பாவை கல்வி நிறுவனங்களின் தாளாளர் மங்கை நடராஜன் குத்துவிளக்கேற்றினார். கேரளா செயிண்ட்கிட்ஸ் குரூப் ஆப் இன்ஸ்டிடியூசன்ஸ் கல்லூரி பேராசியர், மேலாண்மை துறை தலைவர் எல்ஜின் அலெக்சாண்டர் கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார்.

முன்னதாக சிறப்பு விருந்தினருக்கு, பாவை கல்வி நிறுவனங்களின் நிறுவனர், தலைவர் ஆடிட்டர் நடராஜன் நினைவு பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் விழா மலர் வெளியிடப்பட்டது. பின்னர் பாவை பொறியியல் கல்லூரி மேலாண்மை துறை தலைவர் சுவர்ணலதா நிகழ்ச்சி குறித்து விளக்கினார். பின்னர் மாணவ, மாணவியர் ஆய்வு கட்டுரைகளை சமர்பித்தனர். மாணவ, மாணவிகள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us