UPDATED : ஜன 30, 2026 02:14 PM
ADDED : ஜன 30, 2026 02:15 PM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், 'உலகம் உங்கள் கையில் திட்டம்' சார்பில், 2,831 மாணவ மாணவியருக்கு மடிக்கணினிகளை, கலெக்டர் கலைச்செல்வி நேற்று வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு கல்லுாரிகளான அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லுாரி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, அரசு செவிலியர் பயிற்சி பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்லுாரிகள் என, 88 கல்லுாரிகளில் பயிலும் இறுதியாண்டு மாணவ, மாணவியர் 11,649 பேருக்கு மடிக்கணினி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, கடந்த 5ம் தேதி, 2,629 மாணவ, மாணவியருக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
இரண்டாம் கட்டமாக, மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி, காஞ்சிபுரம் கலெக்டர் வளாக கூட்டரங்கில் நேற்று நடந்தது.
இதில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, 22 கல்லுாரிகளைச் சேர்ந்த, 2,831 மாணவ, மாணவியருக்கு, மடிக்கணினிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சுந்தர், எழிலரசன், மேயர் மகாலட்சுமி, ஒன்றிய குழு தலைவர்கள், மாணவ மாணவியர் பங்கேற்றனர்.

